தூத்துக்குடி: வேளாண் பொறியியல் துறை மூலம் ரூ. 10 கோடி மானியம் விடுவிப்பு

53பார்த்தது
தூத்துக்குடி: வேளாண் பொறியியல் துறை மூலம் ரூ. 10 கோடி மானியம் விடுவிப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில்: வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணை இயக்கத் திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் 

கடந்த மூன்றரை ஆண்டுகளில் வேளாண் பணிகளுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் உழுவை வாடகைத் திட்டத்தின் ई-வாடகை செல்போன் செயலியின் மூலம் வாடகை முன்பணம் செலுத்திய 996 விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில் மண் தள்ளும் இயந்திரம், சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம், உழுவை இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் வழங்கப்பட்டன. 

மேலும், 331 தனிநபர் விவசாயிகளுக்கு டிராக்டர், பவர் டில்லர், விசைத்தெளிப்பான், கதிர் அடிக்கும் இயந்திரம் போன்ற இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்குவதற்கு ரூ.3.51 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 32 விவசாய குழுக்களுக்கு கிராம அளவிலான வேளாண் வாடகை இயந்திர மையங்கள் அமைக்கப்பட்டு ரூ.2.52 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 

சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள், பசுமை குடில், அறுவடைக்குப் பின்னர் தொழில்நுட்ப மேலாண்மை இயந்திரங்கள், மின்மோட்டார் பம்பு செட்டுகள் என மொத்தம் 2,228 விவசாயிகளுக்கு சுமார் ரூ.7.70 கோடி மற்றும் 32 விவசாயக் குழுக்களுக்கு சுமார் ரூ.2.52 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி