மாரியம்மன் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா!

156பார்த்தது
மாரியம்மன் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா!
கோவில்பட்டி மாரியம்மன் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா



கோவில்பட்டி மாரியம்மன் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம்
ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் நேற்றுமுன்தினம் இடம் பெயர்ந்தனர். இதை முன்னிட்டு கோவில்பட்டி கதிரேசன் ரோட்டிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில் மாலை 6 மணிக்கு கணபதி பூஜை, சங்கல்பம், ஸ்தபன கும்பகலச பூஜை, யாக சாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ராகு, கேதுவுக்கு மஞ்சள், பால், தேன், பன்னீர், சந்தனம் முதலான 18 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி