தூத்துக்குடி: ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

81பார்த்தது
தூத்துக்குடி: ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பர நகர் பகுதியைச் சேர்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் என்பவர் தனது வீட்டின் அருகில் உள்ள பொதுப்பாதையை 5' அடி ஆக்கிரமித்திருப்பதாகவும், இதனால் அங்குள்ள மயானத்திற்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறி, பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த கோரிக்கையை முன்வைத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பட்டா உட்பிரிவை கோட்டாட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி