விதைகள் விலை தாறுமாறாக உயர்வு.. விவசாயிகள் கவலை

77பார்த்தது
விதைகள் விலை தாறுமாறாக உயர்வு.. விவசாயிகள் கவலை
தூத்துக்குடி மாவட்டத்தில் விதைகள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன. பெரும்பாலான நிலங்கள் வானம் பார்த்த பூமி ஆகும். ஆண்டுக்கு ஒரு முறை பெய்யக்கூடிய மழையை நம்பி இந்நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலங்களில் உழுந்து, பாசி , கம்பு, மக்காச்சோளம் வெள்ளைச் சோளம், மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, சூரியகாந்தி, பருத்தி போன்றவைகள் பயிரிடப்படுகிறது

வரக்கூடிய புரட்டாசி பட்டத்திற்கு விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதைப்பு செய்ய தயார் படுத்தி வைத்திருக்கின்றனர். புரட்டாசி பருவத்திற்கு இன்னும் 20 நாட்களே உள்ளன. விவசாயிகள் தங்கள் நிலங்களில் திரட்சியாக விளைந்த கதிர்களை பதப்படுத்தி எடுத்து வைத்து அதையே விதைகளாக பயன்படுத்தி வந்தனர். அவ்விதைகள் அனைத்தும் நாட்டு ரக விதைகள் ஆகும்.

இவ்விதைகள் குறைந்த அளவு மகசூல் மட்டுமே கிடைப்பதால் தற்போது உள்ள சூழ்நிலைக்கேற்பவும். தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்பவும் வீரிய ஒட்டு ரக விதைகளை பயன்படுத்தி அதிகமாக விளைச்சலை தற்போது பெற்று வருகின்றனர். வீரிய ஒட்டு ரக விதைகள் அனைத்தும் தனியார் விதை கடைகளில் விவசாயிகள் விலைக்கு வாங்குகின்றனர். அவற்றின் விலை தற்போது தாறுமாறாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி