தூத்துக்குடி ஜெயலானி தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ், இவர் செல்சீனி காலனி பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இரும்பு கழிவுகள் பழைய பொருட்கள் சேகரித்து பின்னர் பிரித்து அனுப்பும் குடோன் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை குடோன் அருகே உள்ள முள்புதரில் சிலர் தீவைத்து எரித்துள்ளனர் அப்போது பலத்த காற்று வீசி வந்ததால் முட்புதரில் வைக்கப்பட்ட தீ அருகே இருந்த பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கும் பரவியது.
இதில் தீ மள மளவென பறவியதால் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்கள் பழைய வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை தீ பிளம்பாக எரிய
துவங்கின.
இதன் காரணமாக கரும்புகை சுமார் 100 அடி உயரம் வரை கிளம்பியது காற்று பலமாக வீசியதால் இந்த கரும்புகை தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் பரவியது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி தீயணைப்பு நிலைய மாவட்ட உதவியாளர் நட்டார் ஆனந்தி தலைமையிலான தீயணைப்புத் துறையினர் ஜந்து வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவு பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.