ரயில் நிலையத்திற்கு மேலும் ஒரு வாசல்: மேயர் கோரிக்கை

61பார்த்தது
ரயில் நிலையத்திற்கு மேலும் ஒரு வாசல்: மேயர் கோரிக்கை
தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு மேலும் ஒரு வாசல் அமைக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று(செப்.18) நடைபெற்றது. முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து காெண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் கூறுகையில், "பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களில் ஒரு சில தவிர்த்து, அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், குறுகலான சந்துகளில் விரைவில் சாலைப் பணிகள் நடைபெறும்.

தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு மேலும் ஒரு வாசல் அமைக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். துறைமுக சபை பூங்கா மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அந்த பூங்காவை சென்னை மெரினா போல மாற்றும் வகையில், ரூ. 8 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெறும். பொதுமக்கள் பாலீத்தீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி