விளாத்திகுளம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம்.
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி- வேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ராமஅப்பனசாமி(43), ராமாப்பணசாமி விளாத்திகுளத்தில் இருந்து தத்தநேரி கிராமத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், அப்போது விளாத்திகுளம் அருகே உள்ள ஓ. லட்சுமி நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பெருமாள் (52), என்பவர் அரியநாயகிபுரம் கிராமத்தில் இருந்து ஓ. லட்சுமிநாராயணபுரம் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அரியநாயகிபுரம் கிராமம் அருகே இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ராமஅப்பணசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பெருமாள் படுகாயம் அடைந்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.