எட்டையாபுரம் சாலையில் கடை எண் 4வது ரேஷன் கடையில் நிவாரணத் தொகை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக மலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்து, தற்போது மக்கள் பிரதிநிதிகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலையில் உள்ள 4வது ரேஷன் கடையில் பொது மக்களுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரூபாய் 1000 நிவாரணத் தொகையை வழங்கினார். இந்நிகழ்வில்
திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்களான ஏராளமான உடன் இருந்தனர்.