புதிய வகுப்பறை கட்டிடத்தினை MLA திறந்து வைத்தார்.

70பார்த்தது
புதிய வகுப்பறை கட்டிடத்தினை MLA திறந்து வைத்தார்.
விளாத்திகுளம் அருகே சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய வகுப்பறை கட்டிடத்தினை MLA மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சின்னவநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் (2021-2022) ரூ. 20. 50-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடத்தினையும், குழந்தைநேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 42. 23-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று வகுப்பறை கட்டிடத்தினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில்புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், பள்ளி தலைமை ஆசிரியை அழகம்மாள் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய சின்னமாரிமுத்து ஊராட்சி மன்றத் தலைவர் எர்ரையா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், வேலுச்சாமி, பால்ராஜ் செயலாளர் சுப்புராஜ் முன்னாள் செயலாளர் முத்துப்பாண்டி புதூர் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முத்துராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ-மாணவிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி