தூத்துக்குடி: தொடக்கக்கல்வி தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

63பார்த்தது
தூத்துக்குடி: தொடக்கக்கல்வி தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அன்றோ பூபாலராயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முதலாமாண்டு மற்றும் 2-ம் ஆண்டு தேர்வுகள் 23.05.2025 முதல் தொடங்குகிறது. இந்த மே, ஜூன் 2025 தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வுக்கு, விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தட்கல்) மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்புக் கட்டணமாக கூடுதலாக ரூ. 1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம். 

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம், தகுதி மற்றும் பூர்த்தி செய்வதற்கான அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர் வசிக்கும் மாவட்டத்தில் இயங்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும். 

ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ. 50, முதலாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் ரூ. 100, 2-ம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் ரூ. 100, பதிவுக் கட்டணம், சேவைக்கட்டணம் ரூ. 1, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ. 70 செலுத்த வேண்டும். ஆகையால் தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்தி