சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி எட்டையபுரம், விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 2022-ம் ஏற்கனவே த்தப்பட்ட நிலையில் தற்போது திடீரென சொத்துவரி 6% உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்தும், 40 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாக காரணமாக இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி, இன்று (அக்.,8) தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பேரூராட்சியில் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் முன்னிலையில் பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது திமுக அரசின் 6% சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் எட்டையபுரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.