தூத்துக்குடியில் வீடுபுகுந்து 6 பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் ஜாகீர் உசேன் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதா. தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி சுமதி(45) கடந்த சில தினங்களுக்கு முன்னர், வீட்டின் கதவை சாத்திவிட்டு வெளியே சென்றாராம். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததாம். மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 6 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து சுமதி தாளமுத்துநகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகையை பதிவு செய்தனர். மேலும் நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை கண்டுபிடிக்க அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.