தூத்துக்குடி: பசுமை ஹைட்ரஜன் திட்டம் ஜனவரியில் நிறைவு பெறும் என அறிவிப்பு

71பார்த்தது
தூத்துக்குடி: பசுமை ஹைட்ரஜன் திட்டம் ஜனவரியில் நிறைவு பெறும் என அறிவிப்பு
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் திட்டமானது வரும் ஜனவரி 2025 முடிவடையும் என்று துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் 2024-25 நிதியாண்டில், டிசம்பர் மாதம் 19-ம் நாள் வரை 29.70 மில்லியன் டன்களை கையாண்டு 1.87 சதவிகித வளர்ச்சியும், சரக்குப்பொட்டகங்களை பொருத்தவரையில் 5.62 இலட்சம் டிஇயுக்களையும் கையாண்டு 6.74 சதவிகித வளர்ச்சியும் அடைந்துள்ளது. 

துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறனை அதிகரித்தல் மற்றும் துறைமுகத்திற்கு கப்பல் வந்து செல்லும் நேரத்தை குறைத்தல் போன்ற முயற்சிகளை மேற்கொள்ளுவதற்கு துறைமுகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி