தங்க நகை திருடியவர் கைது!

75பார்த்தது
தங்க நகை திருடியவர் கைது!
விளாத்திகுளம் அருகே தங்க நகை திருடியவர் கைது!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகைவேலன் என்பவரது மனைவி ஜெயந்தி (36), இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூபாய் ரூபாய், 20000 மதிப்புள்ள தங்க நகை திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து ஜெயந்தி மாசார்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், திருடிய நபர் எட்டையாபுரம் நடுவீர்பட்டியைச் சேர்ந்த பகுதி சேர்ந்த வேலுச்சாமி மகன் மாரிச்செல்வம் (47), என்பவர் ஜெயந்தி வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை திருடியது தெரியவந்தது, இதனை அடுத்து மாசர்பட்டி காவல் நிலைய போலீசார் மாரிசெல்வத்தை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய், 20000 மதிப்புள்ள தங்க நகையை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி