சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா!

50பார்த்தது
சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா!
அதிமுக சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா!இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வீர முழக்கமிட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் யாதவ் பிறந்தநாள் விழாவை இந்தியா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதி அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், அதிமுகவினர் பலர் கலந்து கொண்டு மாவீரன் அழகுமுத்துக்கோன் யாதபின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர், பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது, இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என் கே பெருமாள், விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் மகேஷ், நகர செயலாளர் மாரிமுத்து, அதிமுக நிர்வாகி கண்ணன் மற்றும் யாதவர் சமுதாய அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி