தூத்துக்குடி: பாஜக முன்னாள் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

51பார்த்தது
தூத்துக்குடி: பாஜக முன்னாள் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சாலை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி என்பவரின் மகன் கண்ணன் (35), இவர் முன்னாள் விளாத்திகுளம் ஒன்றிய வடக்கு மண்டல பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார், கண்ணனுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ஒரு குழந்தை ஓராண்டுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தது. மேலும், கண்ணனுக்கு கடன் பிரச்சினை அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது, இதனால் மன விரக்தியில் இருந்து வந்த கண்ணன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி