தூத்துக்குடி: தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு தினம் அனுசரிப்பு

60பார்த்தது
தூத்துக்குடி: தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு தினம் அனுசரிப்பு
தூத்துக்குடியில் தீயணைப்புத் துறை சார்பில் தீயணைப்பின் போது உயிர் நீத்த வீரர்களுக்கான தீ தொண்டு தினம் கடைபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஆண்டுதோறும், ஏப்ரல் 14 முதல் 20ம் தேதி வரை தீ தொண்டு வாரம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மாவட்ட அலுவலர் க. கணேசன் தலைமையில் தீயணைப்பு பணியின் போது உயிரிழந்த பணியாளர்களுக்கு தீத்தொண்டு அனுசரிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தூத்துக்குடி நிலைய உதவி மாவட்ட அலுவலர் ந. நட்டார் ஆனந்தி மற்றும் பணியாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி