தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கத்தாளம்பட்டி கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ காலடி கருப்பசாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதல்முறையாக மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது.
இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 34 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பூஞ்சிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயத்திற்கு 5 மைல் தூரமும், தேஞ்சிட்டு மாட்டு வண்டிகள் பந்தயத்திற்கு 3 மைல் தூரமும் போட்டியானது நிர்ணயிக்கப்பட்டு நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழாக்குழுவினர் சார்பாக பரிசுத்தொகை, குத்துவிளக்கு, சுழற்கோப்பை ஆகியவை பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.