இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அதிமுகவினர்!

68பார்த்தது
இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அதிமுகவினர்!
விளாத்திகுளம் அருகே இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அதிமுகவினர்!

தமிழக முழுவதும் இன்று இறுதிக்கட்ட அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து, விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பேரூராட்சி பகுதிகளில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜ்குமார் ஏற்பாட்டில், அதிமுகவினர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எட்டையாபுரம் பஜார் பகுதி மற்றும் பாரதியார் தெரு, எட்டையாபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் ஏராளமானோர் வீடு வீடாகவும், கடை கடையாகவும் சென்று அதிமுக தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி