MLA மார்க்கண்டேயன் தலைமையில் மரங்கள் நடுவது குறித்து ஆலோசனை!

84பார்த்தது
MLA மார்க்கண்டேயன் தலைமையில் மரங்கள் நடுவது குறித்து ஆலோசனை!
MLA மார்க்கண்டேயன் தலைமையில் மரங்கள் நடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக முதற்கட்டமாக
1000-ஏக்கர் பரப்பளவில் தனியார் நிலங்களில் வேப்பமரம் பயிர் இடுதல் குறித்து கூட்டுறவுத்துறை அலுவலர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்வில் மரங்கள் மக்கள் நிர்வாக இயக்குனர் ராகவன்,
இணைப் பதிவாளர் செயலாட்சியர் மத்திய கூட்டுறவு வங்கி தூத்துக்குடி நடுக்காட்டு ராஜா, துணைப்பதிவாளர் கோவில்பட்டி ராமகிருஷ்ணன்
தொழிலதிபர் சுப்பாரெட்டியார், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், கீழவிளாத்திகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நவநீதகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் மகேந்திரன் , கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி