இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் எந்தஒரு செயல் செய்வதாக இருந்தாலும் தன்னம்பிக்கையோடு செய்ய வேண்டும் என்று அமைச்சர் பி. கீதாஜீவன் அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி வ. உ. சி கலைக் கல்லூரியில் நேற்று (அக்.,5) மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்முகத்தேர்வு மூலமாக தெரிவு செய்யப்பட்ட வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தலைமையில் வழங்கி தெரிவித்ததாவது:
படித்து முடித்த இளைஞர்கள் தங்களுக்கு நல்ல ஊதியத்தில் பணி கிடைக்கப்பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதே அவர்களது வாழ்நாள் இலட்சியமாகும். அத்தகைய இளைஞர்களின் நலனில் பெரிதும் அக்கறைகொண்டு, அவர்களின் முன்னேற்றத்திற்காக முழுவீச்சில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார்துறையில் பணிநியமனம் பெறும் வகையில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் சிறிய மற்றும் பெரிய அளவில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் எந்தஒரு செயல் செய்வதாக இருந்தாலும் தன்னம்பிக்கையோடு செய்ய வேண்டும் என அமைச்சர் பி. கீதாஜீவன் அறிவுரை வழங்கினார்.