தனிமையில் இருந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை

539பார்த்தது
தனிமையில் இருந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பாகிருஷ்ணநாயக்கர் என்பவரின் மகன் பொன்ராஜ் (70), இவரது மனைவி வெங்கட்அம்மாள் (63) இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெங்கட்அம்மாள் சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் இருக்கும் தனது மகளை பார்க்க சென்றுவிட்டார். இந்நிலையில் தனிமையில் இருந்த முதியவர் பொன்ராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்ராஜ் உடலை கைப்பற்றி சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி