தூத்துக்குடியில் முடிதிருத்தும் கடையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் பரமசிவன் (50). இவர், தூத்துக்குடி எஸ். எம். புரத்தில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரது கடை முன் மது போதையில் ஒருவர் தகராறு செய்தாராம்.
மேலும், அங்கு கிடந்த கல்லை எடுத்து கடையில் உள்ள கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பினாராம். இது குறித்த பரமசிவன் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், கடையைச் சேதப்படுத்தியது பிரையன்ட் நகரைச் சேர்ந்த சுதன் (28) என்பவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.