தூத்துக்குடி: நெய்தல் கலைத் திருவிழா ஜூன் 13ஆம் தேதி தொடக்கம்

63பார்த்தது
தூத்துக்குடி: நெய்தல் கலைத் திருவிழா ஜூன் 13ஆம் தேதி தொடக்கம்
தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் தூத்துக்குடி ஜூன் 13ஆம் முதல் 15ஆம் தேதி வரை, 4வது நெய்தல் கலைத் திருவிழா தூத்துக்குடி வ. உ. சி கல்லூரி மைதானத்தில் தொடங்கவுள்ளது. 

நெய்தல் கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட மண் சார்ந்த கலைஞர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இந்த விழா ஜூன் 13ஆம் முதல் 15ஆம் தேதி வரை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். 

கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை, கிராமிய நிகழ்ச்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 20க்கும் மேற்பட்ட அரங்குகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி