குடிநீர் குழாய் பதிக்கும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

65பார்த்தது
குடிநீர் குழாய் பதிக்கும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
தூத்துக்குடி டபுள்யுஜிசி ரோட்டில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், "இந்தப் பணிகளினால் டபுள்யுஜிசி ரோடு, ஜெய்லானி தெரு, குமாரர் தெரு, பங்களா தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும் என்றும் பணிகள் நடைபெற்றதனால் மேடு பள்ளமாக உள்ள அந்த சாலையும் சீரமைத்து தரப்படும் என்றுதெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநகர செயலாளர் முரளி, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி