தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிழக்கு மண்டலம் ஏற்பாட்டின் பேரில் சிவன் கோவில் அருகே இன்று கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணியை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கன் வழங்கினார்
இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் கோடை காலத்தை முன்னிட்டு திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மற்றும் கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் உள்ளாட்சி பிரிவு மாவட்ட துணை தலைவர் செந்தில் குமார் கிழக்கு மண்டல பொதுச்செயலாளர் வன்னியராஜ் மற்றும் சண்முகம் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சித்ராங்கதன் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கினார் நிகழ்ச்சியில் மாநில ஓபிசி பிரிவு துணைத் தலைவர் ரமேஷ் கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.