தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்ரசன் மற்றும் போலீசார் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு எப்.சி.ஐ குடோன் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போனபோது ஒருவன் தன் முதுகில் வைத்திருந்த சுமார் 3 அடி நீளம் உள்ள அரிவாளை எடுத்துக்காட்டி எங்களை பிடிக்க முயன்றால் வெட்டி விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் 2 பேரையும் மடக்கிப்பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 4வது தெருவில் வசிப்பவர் பாண்டி மகன் அருண்குமார் என்ற அருண் (23), தி சவேரியார்புரம் ஜெ.ஜெ. நகர் 4வது தெருவைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜ் மகன் தினேஷ் (23) என்பது தெரிய வந்தது. பின்னர் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.