ஆங்கிலப் புத்தாண்டை தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் டிச. 31 முதல் ஜன. 2ஆம் தேதி வரை 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.