தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் ஆற்றின் ஆழமான பகுதியில் மூழ்கி மாணவர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. நீச்சல் தெரியாமல் ஆற்றின் ஆழமான பகுதியில் மாணவர் குளித்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. நீரில் மூழ்கிய கல்லூரி மாணவரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் முழு வீச்சில் இறங்கியுள்ளனர்.