தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடை விழாவை முன்னிட்டு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் 26ம் தேதி கால்நட்டு விழாவுடன் கொடை விழா ஆரம்பமானது. இதனை முன்னிட்டு தொடர்ந்து 8 நாட்கள் தினமும் இரவு முனியசாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும் நடைபெற இருக்கிறது.
விழாவை முன்னிட்டு உலகில் அமைதி நிலவ வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.