தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்தவர் முகம்மது கருன் மனைவி கும்ரோனிஷா (63). இவர் கடந்த 20ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மருத்துவ சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளார். கடந்த 24ஆம் தேதி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்கச் செயின் திருடுபோயிருந்தது. இதுகுறித்து அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அருள் சாம்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.