உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை உலக துப்புரவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தன்று உலகம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இன்று (செப் 21) உலக துப்புரவு தினத்தை முன்னிட்டும் தூய்மை இந்தியா பணியின் கீழும் தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மண்டல மேலாளர் ரமேஷ் வாசன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் கலந்து கொண்டு துப்புரவு பணியை துவக்கி வைத்தனர்.
இதில் கிராம வங்கியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு முத்து நகர் கடற்கரையில் கடற்கரை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.