தூத்துக்குடி: புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை துவங்கி வைத்த முதல்வர்

50பார்த்தது
தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் வைத்து நடைபெறும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் விரிவாக்கம் செய்யப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இந்த திட்டம் மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 75,028 மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் பெற உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் டாக்டர் இளம்பகவதி கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி