தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இன்று(செப்.28) மாலை பதவி ஏற்றுக்கொண்டார். துணை முதல்வர் பதவி ஏற்பை கொண்டாடும் வகையில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கீதா பள்ளி சந்திப்பில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, கலைச்செல்வி திலகராஜ், திமுக மாவட்ட பிரதிநிதியும் வட்டச் செயலாளருமான தெர்மல் சக்திவேல், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், திமுக வட்ட செயலாளர்கள் கதிரேசன், வழக்கறிஞர் சதீஷ்குமார், பாலன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, ரவி, உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.