நாடு முழுவதும் வருகிற ஐந்தாம் தேதி உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த தக்ஃலைப் வெளியாகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் தக்ஃலைப் திரைப்படம் வெளியிடப்படுகிறது. இந்த படத்தை உற்சாகமாக வரவேற்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் ஜவகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் திரைப்படத்தை உற்சாகமாக வரவேற்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடுவதுடன் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.