தூத்துக்குடி மாநகரப் பகுதியில் திடீர் மின்தடை; பொதுமக்கள் பாதிப்பு

77பார்த்தது
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இன்று இரவு சுமார் 7 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தூத்துக்குடி நகரின் முக்கிய பகுதிகளான சிவன் கோவில் பகுதி, பால விநாயகர் கோவில் தெரு, பழைய பேருந்து நிலையம், திருச்செந்தூர் ரோடு, பிரையன்ட் நகர், சண்முகபுரம், மீனா கானா தெரு, ராஜமன்னார் தெரு, இரண்டாம் கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. 

கோடை காலத்தில் திடீரென மின்வெட்டு காரணமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த மின்வெட்டு காரணமாக தேர்வு எழுதக்கூடிய மாணவர்களும் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் தற்போது இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு காலம் என்பதாலும், கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்பதாலும் நோன்பு இருப்பவர்கள் அவதிப்படும் சூழ்நிலையும், ரம்ஜான் பண்டிகை வர உள்ள நிலையில் வியாபாரமும் பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 

எனவே தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக மின் வாரியம் சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மின்துறை அதிகாரியிடம் கேட்டபோது புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள துணை மின் நிலையத்தில் பழுது காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளது. சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி