புதுமைப்பெண் திட்டம் மாணவியர் பயன்பெறுவார்கள்: அமைச்சர்

54பார்த்தது
முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை துவக்கி வைக்க உள்ள புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 75, 028 மாணவியர் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் 30ஆம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் வைத்து நடைபெறும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் விரிவாக்கம் செய்யப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தை தமிழகத்தில் ஒரு ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

பெண்கள் அனைவரும் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற வகையில் உன்னத திட்டமான புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் துவங்கி வைக்க உள்ளார். ‌
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 30ஆம் தேதி தூத்துக்குடியில் வைத்து தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த உடன் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 75, 028 மாணவியர்க்கு மாதம் 1, 000 ரூபாய் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி