தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க் பகுதியில் தொடர் விபத்துகளை தடுத்திடும் வகையில் வேகத்தடை அமைக்க கோரி 27ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர செயலாளர், முனியசாமி என்பவர் அறிவித்ததைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினை நிகழா வண்ணம், நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, நேற்று(செப்.28) காலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சியின் தென்மண்டல உதவி ஆணையர் அலுவலக இளநிலை பொறியாளர், உதவி கோட்டப் பொறியாளர், தேசிய நெடுஞ்சாலை, உதவி கோட்டப்பொறியாளர், தூத்துக்குடி தலைமையிடத்து துணை வட்டாட்சியர், முத்தையாபுரம் உதவிக் காவல் ஆய்வாளர், புதுக்கோட்டை வருவாய் ஆய்வாளர், முள்ளக்காடு பகுதி 1 கிராம நிர்வாக அலுவலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க் பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.