ரம்ஜான் சிறப்பு தொழுகை; உலக அமைதி வேண்டி பிரார்த்தனை!

69பார்த்தது
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியில் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொழுகை திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நூற்றுக்கணக்கான ஆண் பெண் இஸ்லாமியர்கள் உலக அமைதி சகோதரத்துவம் தழைக்க வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்

இஸ்லாமியர்களின் நோன்பு பெருநாளான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 30 நாட்கள் நோன்பு இருந்தனர் இதை தொட ர்ந்து
நேற்று மாலை வளைகுடா நாடான சவுதி அரேபியா துமையர் என்ற பகுதியில் பிறை தென்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள லூர்த்த மாள்புரம், மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்


இதையொட்டி லூர்தம்மாள் புரம் பகுதியில் உள்ள மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொழுகை திடலில் புத்தாடைகள் அணிந்து நூற்றுக்கணக்கான ஆண் , பெண் இஸ்லாமியர்கள் இமாம் அஸ்கர் தலைமையில் உலக அமைதி மற்றும் சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் வேண்டி
சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் பின்னர் ஒருவருக்கு ஒருவர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி