துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்!

68பார்த்தது
தூத்துக்குடி ஆடி வெள்ளியை முன்னிட்டு பாகம்பிரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது ஏராளமான பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு


ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும் ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும் ஏராளமான பெண்கள் ஆலயத்திற்கு வந்து அம்மனை வழிபடுவர்

தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள பாகப்பிரியாலுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது இதே போன்று ஆலய வளாகத்தில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் சன்னிதியில் பட்டீஸ்வரன் துர்க்கை அம்மன் அலங்காரத்தில் துர்க்கை அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு துர்க்கை அம்மன் பாடல்களை பாடி வழிபாடு நடத்தினர் மேலும் ஏராளமான பெண்கள் நெய்விளக்கு ஏற்றியும் வழிபாடு செய்தனர்

தொடர்புடைய செய்தி