தட்டார்மடம் அருகே நீண்ட நாட்களாக தூக்கமின்றி தவித்த இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே சாலைபுதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சுடலைமுத்து(32) தொழிலாளி. இவரது மனைவி சிவலட்சுமி(27). இவர்களுக்கு இரண்டரை வயதில் சண்முகபிரியா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது சிவலட்சுமி, நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதனிடையே கடந்த இரண்டு மாதமாக சுடலை முத்து, தூக்கம் வராமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் தூக்கம் பிரச்னை தீரவில்லை. மேலும் ஊர்மக்கள், ஆலோசனைப்படி பில்லி சூனியத்திற்கும் வைத்தியம் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் தூக்கமின்றி தவித்து வந்தாராம்.
இந்நிலையில் சுடலைமுத்து, வழக்கம்போல் தூக்கமின்றி தவித்த நிலையில் என்ந்;ந்[ காலை வீட்டு சமையல் அறை ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை கம்பியில் தனது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மனைவி சிவலட்சுமி தட்டார்மடம் போலீசில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.