தென்மண்டல அளவில் சிறந்த காவல் நிலையம் தேர்வு;

66பார்த்தது
தென்மண்டல அளவில் சிறந்த காவல் நிலையம் தேர்வு;
தென்மண்டல அளவில் சிறந்த காவல் நிலையமாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சேவையை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாடு சேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு தமிழக முதல்வரின் கேடயம் வழங்கப்படுகிறது.

மேலும் தென் மண்டல அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கும் இந்த கேடயங்கள் வழங்கப்படுகிறது. இதில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இயங்கி வரும் காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் முன்னீர்பள்ளம் காவல் நிலையமும், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் காவல் நிலையமும், தூத்துக்குடி மாவட்டத்தில் வடபாகம் காவல் நிலையம் சிறந்த சேவைக்குரியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த காவல் நிலையங்களுக்குரிய முதல்வர் கேடயங்களை டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார். சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் அதனை பெற்றுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி