பக்தர்களுக்கு தவெக சார்பில் மரக்கன்றுகள் குளிர்பானங்கள்

65பார்த்தது
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா கொடியேற்றத்திற்கு வந்த பக்தர்களுக்கு தமிழக வெற்றிக்கழக சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மரக்கன்றுகள், குளிர்பானங்கள், புத்தகம் மற்றும் குழந்தைகளுக்கு தளபதி விஜய் உருவம் பதித்த பலூன் வழங்கினார்.


தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி பத்து தினங்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.

இந்த பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் ஜாதி மதம் பேதமின்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரக்கன்றுகள், புத்தகம், குளிர்பானங்கள் மற்றும் தளபதி விஜய் உருவம் பதித்த பலூன் வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் பக்தர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மரக்கன்று குளிர்பானம் புத்தகம் மற்றும் தளபதி விஜய் உருவம் பதித்த பலூன் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி