தூத்துக்குடியில் ஜவுளிக்கடையில் ரூ. 3 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி ரஹ்மத் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர் மகன் சம்சு பக்கீர் (39), இவர் தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் நேற்று காலை கடை திறக்க வந்தார். அப்போது கல்லாவில் வைத்திருந்த ரூ. 3 லட்சம பணம் திருடுபோயிருந்தது. மர்ம நபர்கள் மொட்டை மாடி வழியாக கதவை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடியது தெரியவந்தது.
இது குறித்த அவர் மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்னறர். தூத்துக்குடியில் பிரதான சாலையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.