தூத்துக்குடியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி சண்முகபுரம் 1வது, 2வது தெரு, மற்றும் வண்ணார் தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டன.
பைப் லைன் பதித்த பின்னர் குழிகளை சரியாக மூடாமல், சமன்படுத்தாமல், உடைக்கப்பட்ட சாலை கழிவுகளை அப்படியே போட்டுச் சென்றுவிட்டனர். இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதில் பகல் நேரத்தில் நடந்து செல்பவர்கள் கூட பலர் தடுமாறி கீழே விழுந்துள்ளனர். காலை, மற்றும் மாலை வேளைகளில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்பவர்கள், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்க நேரிடுகிறது.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குழிகளை சமன் செய்து, மீதமுள்ள தார் சாலை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.