தூத்துக்குடி: அனல்மின் நிலையத்தை போர்க்காலஅடிப்படையில் சீரமைக்க கோரிக்கை

54பார்த்தது
தூத்துக்குடி: அனல்மின் நிலையத்தை போர்க்காலஅடிப்படையில் சீரமைக்க கோரிக்கை
தீ விபத்து ஏற்பட்டுள்ள தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 16) ஏற்பட்ட தீ விபத்தில் அனல்மின் நிலையத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது அலகுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த பணிகளை சரிசெய்ய ஆறு மாதங்கள் ஆகும். முதலில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். இந்நிலையில் தமிழக அரசு தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை சரிசெய்யவும், முதலாவது மற்றும் இரண்டாவது அலகுகளை சரிசெய்து போர்க்கால அடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வரும் மே, ஜூன் மாதங்களில் மின் தேவை அதிகமாக இருப்பதால் உடனடியாக இந்த பணிகளை துவங்க வேண்டும். இந்த பணிகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட மின்வாரிய ஊழியர்கள் தயாராக உள்ளனர். எனவே தமிழக அரசும் மின்வாரியமும் இந்த பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் செயலாளர் அப்பாதுரை தமிழக அரசுக்கும் மின்வாரியத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி