தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் அகற்றும் பணிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தருவை விளையாட்டு மைதானம் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவது குறித்தும், மாநகராட்சி வர்த்தக மையத்தில் வருகிற 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் புத்தொழில் களம் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும் கனிமொழி எம்பி ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் பலர் உடனிருந்தனர்.