திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடியில் இயங்கி வந்த அண்ணா பழைய பேரூந்து நிலையமானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ. 57 கோடியிலும் அம்பேத்கார் நகரில் ரூ. 29 கோடியில் ஸ்டெம் பார்க்கும் (STEM PARK) புதிதாக கட்டப்பட்டுள்ளதை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்திடவும், ரூ. 87 கோடி மதிப்பில் பல்வேறு கழிவுநீர் கால்வாய் பணிகள் துவக்கி வைக்கப்படவும் உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தி. மு. கழக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வள்ர்ச்சித்துறை அமைச்சருமான. கே. என். நேரு அவர்களும், தி. மு. கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்களும் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றுகிறார்கள்.
எனவே அனைத்து நிகழ்ச்சிகளிலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், சட்டமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.