பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி; ஆட்சியர் எஸ்பி ஆய்வு

4252பார்த்தது
தூத்துக்குடி பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகிற 28ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ள நிலையில் விழா நடைபெறும் பகுதியை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகிற 28ஆம் தேதி தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு வெளித் துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மேலும் புதிய திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக விழா நடைபெறும் பகுதியில் மேடை அமைப்பதற்காக கான்கிரீட் தளம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தூத்துக்குடி துறைமுகம் வ உ சி துறைமுக பொறியாளர் ரவிக்குமார் தலைமை இயந்திர பொறியாளர் சுரேஷ்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி