பொட்டல்காடு குடிநீர் பிரச்சனை: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

83பார்த்தது
பொட்டல்காடு குடிநீர் பிரச்சனை: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
பொட்டல்காடு பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் நோில் சென்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொட்டல்காடு கிராமத்தில் குடிநீர் பிரச்சனை நிலவி வருவதாக கூறப்பட்டது. இதனையடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொட்டல்காடு கிராமத்திற்கு அதிகாாிகளுடன் நோில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதை உடனடியாக தீர்த்து வைக்குமாறு அதிகாாிகளிடம் கேட்டுக்கொண்டார்.

அப்போது மக்களிடையே அவர் பேசும் போது "திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்த பகுதிக்கு புதிய திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் முக. ஸ்டாலினும் மக்கள் நலன் தான் முக்கியம் என்று கருதி பணியாற்றுகிறார். அவரது வழியில் உங்களது சில கோாிக்கைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக முழுமையாக செய்து கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

ஆய்வின்போது திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பகுதி செயலாளர் மேகநாதன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி